Edathanur Village

Edathanur Village Edathanur Village is kingdom of fun, comedy, jobless, entertainments

07/06/2022

வாகன விபத்தில் பாதிக்கப் படுபவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கீழ்கண்டவாறு நிவாரண உதவிகள் தமிழக அரசால் வழங்கப்படுகிறது...
337 இ.த.ச (ரூ 25000),
338 இ.த.ச (ரூ 50000),
304(அ) இ.த.ச (100000),
பொதுவாக விபத்தில் யாராவது உயிரிழந்தால் அவர் குடும்பத்தினரை காவல்துறையினர் தானாகவே அழைத்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர உதவி செய்கின்றனர்.
ஆனால்(போதிய விழிப்புணர்வு இல்லாததால்) விபத்தில் காயமோ, கொடுங்காயமோ, உயிர் இழப்போ ஏற்பட்டால் அரசு வழங்கும் நிவாரண உதவியை பெற்றுதருமாறு யாரும் உதவி ஆய்வாளருக்கு மனு அளிப்பதில்லை காவல்துறையினரும் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இதற்காக மனுப் பெற முடிவவதில்லை
எனவே,
337,338,304(a)ipc வழக்குகள் போடப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவர் அனைவருக்கும் இது பொருந்தும் இதை செய்வதற்க்கு அந்த வழக்கின் எப்.ஐ.ஆர் ,காயச்சான்று , பாதிக்கப்பட்ட நபரின் ஆதார்(அ) வாக்காளர் அடையாள அட்டை ,மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டருகே வசிக்கக்கூடிய நபர்கள் யாராவது இருவருடைய அடையாள அட்டை self attested உடன் இவை அனைத்திலும் தலா இரண்டு நகல்கள் இணைக்கப்பட வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட நபர் அரசு வழங்கும் நிவாரண நிதியை அரசிடம் இருந்து பெற்றுத்தருமாறு உதவி ஆய்வாளருக்கு ஒரு மனு கொடுக்க வேண்டும் இவை அனைத்தையும் விக்டிம் பன்டு ( victim fund) மனுவுடன் இணைத்து உதவி ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்ற உடன் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும் பின்பு அங்கிருந்து உடனடியாக கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் பின் உடனடியாக கோட்டாட்சியர் பாதிக்கப்பட்ட நபரை நேரில் அழைத்து பண உதவி வழங்குவார்.............
தயவு செய்து இந்த தகவலை மற்ற குரூப்புகளுக்கும் அதிகம்
பகிரவும். கண்ணுக்குத் தெரியாத குடும்பத்திற்கு உதவ நம்மாலும் முடியும்.
மனு வழங்க காலக்கெடு இல்லை.

 #கடந்து_செல்ல_இயலா_கசப்பான_ஊரக_உள்ளாட்சி_தேர்தல்_2019_நிகழ்வு: ுட  #ஆளுமை_தோற்கடிக்கப்பட்ட_நாள்.உலகமே வியந்து பார்க்கும...
07/01/2020

#கடந்து_செல்ல_இயலா_கசப்பான_ஊரக_உள்ளாட்சி_தேர்தல்_2019_நிகழ்வு:

ுட #ஆளுமை_தோற்கடிக்கப்பட்ட_நாள்.

உலகமே வியந்து பார்க்கும் ஒரு பசுமையான கிராமத்தை உருவாக்கிய சண்முகம் அய்யாவின் தோல்வி ஏனே உண்மை என்றாலும் முடிவினை ஏற்க மனம் மறுக்கிறது.

#பஞ்சாயத்து_ராஜியம் பற்றிய சண்முகம் அய்யாவின் புரிதல் வியக்கத்தக்கது.

#லஞ்சம்_லாவண்யம் இல்லா நிர்வாகத்தை தொடர்ந்து கிராம வளர்சிக்கு தொடர்ந்து அளித்தவர்.

#850 வீடுகளை இலவசமாகக் கட்டி தந்த
தேசிய அளவிலே #முன்னோடி, #முன்மாதிரி கிராமமாக தனது கிராமத்தை மாற்றியவர்.

உள்ளூர் #லயன்ஸ்_கிளப்பில் துவங்கி, ்கி, #ஜப்பான் நாட்டின் பாராட்டு. #நிர்மல்_புரஸ்கார் தொடங்கி, #பாரத்_ரத்னா_ராஜீவ்காந்தி #சுற்றுச்சூழல் விருது வரை. விருதுகள் குவிந்து இதுவரை #53 நாடுகளை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த கிராமத்தை பார்த்து ஆய்வு செய்து பாராட்டி உள்ளனர்.

கிராமத்துல இருக்குற மொத்தப் பேருக்குமே #சொந்த_வீடு,அதுல முக்கால வாசி வீடு #அரசு_தொகுப்பு வீடுகளாக அமைத்து கொடுத்தவர் சண்முகம் ஐயா அவர்கள்.

பல பஞ்சாயத்துகள் முறையான நிதி வசதியில்லாமல் திண்டாடி கொண்டிருக்கும் நிலையில், சண்முகம் ஐயா அவர்கள் கோடி ரூபாய் செலவில் #காற்றாலை_நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு உயர்ந்தவர்.

பவானி ஆற்றை பயன்படுத்தி #நீர்மின்சக்தி_யூனிட் அமைத்தவர்.

கோயமுத்தூர் #ஓடந்துறை #சண்முகம் அய்யாவின் அவர்களது தோல்வி மிக மிக வருத்தத்தை தருகிறது.

# #சண்முகம் அய்யா அவர்கள் நிர்வாகம் பற்றி நன்றாக அறிந்த அளப்பரியா சிறந்த சமூக செயற்பாட்டாளர்..

பல்வேறு இளைஞர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் பற்றிய தெளிவு படுத்தி அரசியல் புரிதலை மற்றும் ஆர்வத்தை தூண்டி சமூகத்திற்காக களப்பணி ஆற்ற வைத்தவர் #ஓடந்துறை #சண்முகம் அய்யா அவர்கள்.

அய்யா உங்களது தோல்வி அந்தப் பகுதி மக்களின் தோல்வியே தவிர உங்களது தோல்வி இல்லை.

உண்மையில் சொல்லப் போனால் ஓடந்துறை ஊராட்சி மக்கள் தான்.. தோல்வியைத் தழுவியுள்ளனர் அய்யா.
நன்றி .. திரு Suriyan Ravi

16/12/2019

பிரெஞ்ச் தமிழ் தீவு

05/12/2019

கீழ்க்கண்ட ஆங்கில - தமிழ்ச் சொற்களை உற்று கவனியுங்கள்!

Mango - மாங்காய்
Cash - காசு
One - "ஒன்"று
Eight - "எட்"டு
Victory - வெற்றி
Win - வெல்/வென்று
Wagon - வாகனம்
Elachi - ஏலக்காய்
Coir - கயிறு
Eve - அவ்வை
Terra - தரை
Metre - மாத்திரை (unit representation in Tamil)
Name - நாமம் (பெயர் - எ.கா சிவனின் நாமத்தை துதிப்போம், இதை இந்தியில் நாம் என்று சொல்வார்கள்)
Vomit - ஒமட்டு (குமட்டுதல்)

பின்வரும் வார்தையில S ஐ நீக்கிவிட்டு பார்த்தால், அப்படியே தமிழ் சாயல்.

Script - குறிப்பு
Speech-பேச்சு
Speed - பீடு/வேகம் (பீடு நடை - வேக நடை)
Sponge - பஞ்சு
Snake - நாகம்

A"ttack" - தாக்கு
M"ake" - "ஆக்க"ம்
Round - உ"ருண்டை"
Lemon - "இளம"ஞ்சள்காய் (எலுமிச்சை)
Roll - உ"ருள்"
Orate - "உரை"யாற்று
"Know"ledge - "ஞான"ம்
Ginger - இ"ஞ்சி"

Molecule - மூலக்கூறு
Kill - கொல்
Prize - பரிசு
Other - இதர
Tele - தொலை
Teak - தேக்கு
Rice -அரிசி
Aqua - அக்கம்
Venom - விடம்
Fade - வாடு
Poly- பல
Mega - மிக
Accept - இசைப்படு
Mature - முதிர்
Goat - கடா
Pain - பிணி

Yarn - ஞாண் (அறிக- yarn=thread,
ஞாண் என்றாலும் கயிறு. அரைஞாண் கயிறு என்று சொல்லுவதை நினைவில் கொள்க)
Culprit - கள்ளன்(குற்றவாளி)
Torque - திருகி
Level - அளவு
Mad - மடமை
Surround - சுற்றம்
God - கடவுள்
Birth - பிறந்த
Capture - கைப்பற்று
Want - வேண்டி
Plough - உழவு
Sudden - உடன்
Adamant - அடம்
Fault - பழுது
Shrink - சுருங்கு
Villa - இல்லம்
Path - பாதை
Via/Way - வழியாக
Bottle - புட்டில்/புட்டி
Cot - கட்டில்
Nerve - நரம்பு
Betrothal - பெற்றோர் ஒத்தல் (திருமணத்திற்கு பெற்றோர் சம்மதித்தல்)
Grain - குருணை
Button - பொத்தான்.

10/01/2019

இதை வாசிக்கும் துணிவு உள்ளதா உங்களுக்கு..?

அந்த கோர்ட் வளாகம் ஸ்தம்பித்து நின்றது அன்று.

தன் கணவனை அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற ஒரு மனைவிக்கு தீர்ப்பு வழங்கிய நாள் அது.

குடிபோதையில் தனது இரண்டு குழந்தைகளை ( 7 வயது மற்றும் 5 வயது ) காலால் மிதித்துக் கொன்ற கணவனை ஆவேசத்தோடு அரிவாள் மனையால் வெட்டிக் கொன்ற அந்தப் பெண்ணுக்கு தண்டனை வழங்கி தீர்ப்புச் சொல்லும் நாள்.

அனைவரின் எதிர்பார்ப்புக்கும் இடையில் தனது ஆசனத்தில் வந்து அமர்ந்த நீதிபதி தனது தீர்ப்பினை வாசித்தார்.

இந்த வழக்கு கொஞ்சம் சிக்கலானது. என்றாலும் சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் குற்றவாளியின்
வாக்குமூலங்களை வைத்துப் பார்க்கும் போது குடிகாரக் கணவனிடம் அவனது கொடுமைகளைச் சகித்து வந்த இந்த பெண்மணியின் பொறுமையின் மேல் கேள்வி எழுகிறது.

தனது கணவன் குடித்து விட்டு பலநாட்கள்
பல வகைகளில் சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இங்கே ஒரு விடயம் யோசிக்கச் செய்கிறது. தனது கணவனின் அளவில்லாத குடிவெறித்தனங்களைச் சகித்திராமல் காவல் துறையில் புகார் செய்திருக்கலாம் இந்தப் பெண்மணி. அவ்விதம் செய்யாமல் பொறுத்துச் சகித்துக் கொண்டது முதல் குற்றம்.

சம்பவ தினத்தன்று தன்னை அடிக்க வந்த கணவனிடம் இருந்து குழந்தைகளோடு தப்பித்துச் செல்ல வாய்ப்பிருந்தும் இந்த பெண்மணி அதை ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுகிறது. குடிபோதையில் தனது இரண்டு குழந்தைகளையும் மிதித்தேக் கொன்ற கணவனது செயல் கண்டு பொறுக்க இயலாமல் ஆத்திரத்தில்
அரிவாள் மனையால் வெட்டியதாக இந்தப் பெண் சொல்கிறார்.

கணவன் குடிபோதையில் அந்த இரண்டு குழந்தைகளைக் கொன்றதால் அவன் அப்போது தன்னிலையில் இல்லாத நிலையில் மதுவின் பிடியில் இருந்து அந்த கொலைகளைச் செய்தான் என்றும் அவன் திட்டமிட்டுத் தனது குழந்தைகளைக் கொன்றான் என்று எடுக்க இயலாத நிலையிலும் சந்தர்ப்ப சாட்சியங்கள் அமைந்திருக்கின்றன.

ஆனால் ஆத்திரத்தில் கணவனை வெட்டிய இந்தப் பெண்மணியின் செய்கை தனது செயலால் அவன் உயிர் போகுமென்று நன்கு அறிந்திருந்த நிலையில் எந்த போதைக்கும் ஆளாகாமல் சுய அறிவோடு எடுத்த செயல் என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவன் குழந்தைகளைக் கொன்றதைப் பார்த்த இந்தப் பெண்மணி அங்கிருந்து தப்பித்துச் சென்று காவல் துறையிடம் புகார் செய்து அவனைக் கைது செய்து கோர்ட்டில் கொண்டு வந்து அவனுக்கு தக்க தண்டனை பெற்றுத் தந்திருக்கலாம். அதைச் செய்யாமல் சட்டத்தைத் தனது கையில் எடுத்துக் கொண்டு கொலை செய்த இந்தப் பெண்மணியின் குற்றத்தை சட்டரீதியாகப் பார்க்கும் போது தண்டனைக்குரிய குற்றமாகத் தான் கருத முடிகிறது.

ஆகவே இபிகோ 301 . 302 மற்றும் 306 பிரிவுகளின் கீழ் இந்தப் பெண்மணிக்கு தூக்குதண்டனை வழங்க சட்டம் இருக்கும் நிலையில் கொலை நடந்தது ஆவேசத்தின் பேரிலும் கொலை செய்தவர் பெண் என்ற காரணத்தாலும் இந்தப் பெண்மணிக்கு ஆயுள் தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குகிறேன். ‘’

தீர்ப்பினை வாசித்து விட்டு தனது இருக்கையில் இருந்து எழத் தொடங்கினார் நீதிபதி.

அப்போது அந்தப் பெண்மணி நீதிபதியிடம் கூறினார்.

ஐயா நான் ஓர் ஐந்து நிமிடம் எனது கடைசிக் கருத்தைக் கூற வேண்டும் கேட்பீர்களா ..? ‘’

ஒரு கணம் தயங்கிய நீதிபதி மீண்டும் தனது ஆசனத்தில் அமர்ந்து பேச அனுமதி கொடுத்து கூர்ந்து கேட்கலானார்.

அந்தப் பெண்மணி கூறத் தொடங்கினாள்.:

’’ ஐயா நீங்கள் நீதிமான். நன்கு கற்றறிந்தவர். எனது சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்க வேண்டும். கொடுப்பீர்களா..?

ஒருவேளை நான் அவனைக் கொல்லாமல் போலீஸில் ஒப்படைத்து அந்த வழக்கு உங்களிடம் வந்தால் உங்களது தீர்ப்பு என்னவாக இருக்கும்..? குடிபோதையில் அறியாது செய்த அவனது கொலைகள் ஒரு விபத்தாகக் கருதி சுயநினைவின்றிச் செய்த செயலால் அவனது தண்டனை ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ இருக்கும். அவ்வளவு தானே..?

நான் அவனது குடியையும் கொடுமைகளையும் கடந்த பல வருடங்களாகச் சகித்துக் கொண்டேன். காரணம்..? அவனைத் துரத்தி விட்டாலோ காவல் துறையில் பிடித்துக் கொடுத்தாலோ நான் தனியாய் குழந்தைகளுடன் வாழ வேண்டி இருக்கும். அப்போது இந்த சமூகம் என்னை நிம்மதியாக வாழ விட்டிருக்கும் என்று கருதுகிறீர்களா..?

சம்பவத்தன்று குடிபோதையில் மாதவிலக்காகி இருந்த என்னைப் புணரக் கட்டாயப்படுத்திய அவனைத் தள்ளி விட்டு விலக்கிக் கொண்டிருக்கையில் என்னை அவன் மோசமாக அடிக்கத் தொடங்க அதைக் காணச் சகிக்காமல் என் குழந்தைகள் அவனது காலைக் கட்டிக் கொண்டு அப்பா அம்மாவை அடிக்காதீங்க என்று அழும் போது வெறியில் இரண்டு குழந்தைகளையும் தள்ளி விட்டு சரியாக அவர்கள் கழுத்தில் மாறி மாறிக் காலால் மிதித்துக் கொல்லும் போது நான் ரசித்துக் கொண்டிருக்கவில்லை. பதைத்துக் கொண்டிருந்தேன். அவனைத் தடுக்க முயன்று கொண்டிருந்தேன். ஆனால் அவனது வெறித்தனமான மிதிகளைத் தாங்க இயலாமல் என் கண் முன்னே என் முலைப்பாலருந்தி அந்த மணம் கூட இன்னும் விட்டு விலகாமல் மாசற்ற என் இரண்டு குழந்தைகளும் சாகும் போது என் பதைபதைப்பு எத்தனை இருந்திருக்கும் என்பதை கருப்பையே இல்லாத உங்களால் உணர முடியாது.

அந்த நேரத்தில் என் மனம் அனுபவித்த கொடுமைகளைச் சகித்துக் கொண்டு அவனிடமிருந்து தப்பி ஓடி இரண்டு மைல் தொலைவில் இருக்கும் காவல் நிலையத்திற்கு ஓடி அந்த இரவு நேரத்தில் குடிபோதையில் இரவுப் பணியில் இருக்கும் காவல்துறையின் அதிகாரியிடம் முறையிடப் போயிருக்க வேண்டும். குடிபோதையும் காமவெறியும் மிகுந்த அந்தக் காவலனின் காம வெறிக்கு நான் ஆளான பின்னர் அவனைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்து என் குழந்தைகளைக் கொன்ற அந்த ராட்சதனைக் கைது செய்ய வைத்து உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்க வேண்டும்.

அந்த செயலைச் செய்யாத எனக்கு நீங்கள் தருகின்ற தண்டனையை நான் ஏற்கும் முன் எனது இறுதிக் கேள்வி ஒன்று.

நடந்த அந்த மூன்று கொலைகளுக்கும் காரணகர்த்தா யாரென்று நான் சொன்னால் அவருக்கு தண்டனை தர உங்களுக்குத் துணிவு இருக்கிறதா..?

அப்படி இருக்குமெனில் அந்த மூன்று கொலைகளுக்கும் காரணமான குடிக்குக் காரணமான நமது மாநில முதலமைச்சரைக் கைது செய்து தண்டனை தாருங்கள். வழக்கை சரியாக நடத்தினால் மூன்று கொலைகள் அல்ல மூன்று லட்சம் கொலைகளுக்குக் காரணமானவர் அவர்தானென்று உணர்ந்து தண்டனை தாருங்கள்..

துணிவு இருக்கிறதா உங்களுக்கு...? ‘’

அந்த நீதிபதி ஸ்தம்பித்துப் போனார்.

இந்த பதிவைப் படிக்கும் போது என் கண்கள் கலங்கியது. இந்த வேதனை ஒவ்வொரு குடிகார குடும்பத் தலைவனிடம் அடிபட்டு, மிதிபட்டு வாழும் இல்லதரசிகளின் வேதனை.

இதனால் தான் தமிழ்நாட்டுக்கு பூரண மதுவிலக்கு வேண்டும். சிந்தியுங்கள் மக்களே.

09/01/2019

🐀எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..

மிகவும் விலை உயர்ந்த *வைரம்* அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த 🐀எலியை "ஷூட்"🔫 செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

🐀எலி பிடிப்பவனும் தன் *துப்பாக்கி’யுடன்*🔫 வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய..

எலி அங்கே இங்கே என்று 🐀போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன..

ஆயிரக்கணக்கான
எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் *ஒதுங்கி தனித்தே* நின்றிருந்தது .

எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது..

சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்..எலி *spot out..*🐁

வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான்..

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்..
ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம்? என்றான்.

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்...

இப்படித்தான்...

'பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்" அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான்.

உறவுகளும் அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள்.

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும்(சில ) சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்....👨‍👨‍👧‍👧👨‍👨‍👧‍👧

பூமி பூஜை..
18/12/2018

பூமி பூஜை..

30/11/2018

*எது இருந்தால்,
எது தேவை இல்லை ... ?

உங்கள் ஊரில் கருவேல மரம் இருந்தால் ..
தேவை இல்லை.

உங்கள் வீட்டில் குப்பை மேனி செடி இருந்தால் ..
தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் கற்றாழை இருந்தால் .. தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் கொய்யா மரம் இருந்தால் ..
ூள் தேவை இல்லை ...

உங்கள் தெருவில் பூந்திக்காய் மரம் இருந்தால் ...
& தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் எழுமிச்சை, கரும்பு சர்க்கரை இருந்தால் ...
Floor, bathroom, tiles cleaner தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் ...
பாக்கெட் பால், தயிர் தேவை இல்லை ..

உங்கள் வீட்டில் மண் பானை இருந்தால் ..
Water filter system தேவை இல்லை ..

உங்கள் ஊரில் பனை, தென்னை மரங்கள் இருந்தால் ...
குளிர்பானங்கள் தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் வேப்ப மரம் இருந்தால் ..
கொசு விரட்டி தேவை இல்லை ...

உங்கள் வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் ...
Fridge தேவை இல்லை.

உங்கள் வீட்டில் செடி, கொடி, மரங்கள் இருந்தால் ...
Ac தேவை இல்லை ...

நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் ..
அழகு சாதனப் பொருட்கள்
தேவை இல்லை ...

*தேவையானதை இழந்து,
தேவை இல்லாததை பெறும் நம் அடிமை வாழ்வு என்று மாறுமோ?

நீங்கள் பணம் சம்பாதிக்கும்
அதே வேளையில்,
நமது சொத்தான இயற்கைச் செல்வங்கள் அழிக்கப்படுகிறது என்பது நினைவில் இருக்கட்டும் ....

14/10/2018

ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று, இவ்வேடன் நமது மிருக குலத்துக்கே பகைவன், இவனைக் கீழே தள்ளி விடு!

இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிடம் சரண் புகுந்தவன் ஆகிறான். சரண் அடைந்தவனைக் கைவிட மாட்டேன் இவ்வாறு சொல்லிவிட்டு கரடி உறங்கிற்று. சற்று நேரம் கழித்து புலி வேடனிடம் கூறிற்று, எனக்கு பசியாக இருக்கிறது. நீ அந்தக் கரடியைக் கீழே தள்ளிவிட்டால், நான் அதை உண்டு பசியாறி உன்னை விட்டு விடுகிறேன்.

வேடன் கரடியைத் தள்ளிவிட்டான் கரடியோ மரத்தின் கீழ்க் கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு, விழாமல் தப்பி, மேலே ஏறிக் கொண்டது. அப்போது புலி கரடியிடம் சொன்னது, இந்த மனிதன் நன்றிகெட்டவன். சரண் அடைந்தவனைக் காப்பாற்றுவேன் என்ற கூறிய உன்னையே தள்ளிவிட்டான். அவனை தள்ளிவிடு!

அதற்கு கரடி சொன்னது, எவனோ ஒருவன் தன் ஒழுக்கத்தினின்று வழுவினான் என்பதற்காக நான் என் தர்மத்தைக் கைவிடக் கூடாது. இன்னமும் அவன் சரண் புகுந்தவனே. அவனைத் தள்ளுவது அறத்தினின்று நான் தவறியது ஆகும் என்று கூறி. வேடனைக் கீழே தள்ள மறுத்து விட்டது.

துன்பம் இழைத்தவருக்குப் பதிலுக்குத் துன்பம் இழைத்துப் பழி வாங்குவது சாதாரண மனிதர்களின் இயல்பு. சான்றோர்கள் அப்படிப் பழிவாங்க சந்தர்ப்பம் கிடைத்தாலும், துன்பம் இழைக்க மாட்டார்கள்.

23/08/2018

Address

18A/2 MARRIAMMAN Street
Tiruvannamalai
606707

Telephone

9500802018

Website

Alerts

Be the first to know and let us send you an email when Edathanur Village posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share