Sri Aarathanaa Dry cleaners

Sri Aarathanaa Dry cleaners Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Aarathanaa Dry cleaners, Dry cleaner, Greenlands, Covai Road , (opp Boomerang ice cream), Karur.

18/01/2022
07/08/2021

இரண்டு முக்கியமான சிக்கலும் அதற்கான மகரிஷியின் எளிமையான தீர்வும் : வாழ்த்தும் பயனும்

*****
இதில் குறிப்பிட்டிருக்கும் தீர்வுகள் உங்கள் வாழ்க்கைக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இறுதி வரை தொடர்ந்து படியுங்கள். நன்றி.

*********
சிக்கல் 1 :

சிலருக்கு ஆலோசனைகள் வழங்கினாலும் அதை அவர் அவர் தம் வாழ்க்கையில் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக கணவன் மனைவியாக திருமண சிக்கல் குறித்து பேசி நான் அதற்கு சில தீர்வுகளை கூறியிருப்பேன். அவர்களுக்கு என்னிடம் பேசும் பொழுது அது புரிந்திருக்கும். பிடித்திருக்கும். வீட்டிற்கு சென்று ஓரீரு நாள் அதை பயன்படுத்தியும் இருப்பார்கள்.

ஆனால் தொடர்ந்து செய்வார்களா என்றால் அது சிலருக்கு இயலாது. ஏனென்றால் பிரச்சனையை தீர்க்கவேண்டுமானால் வாழ்க்கையில் சில மாற்றங்களை புரியவேண்டும். மாற்றம் என்பது எளிய விஷயமல்ல. சில தினங்களிலேயே பழக்கத்தினால் பழைய வாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள். ஏனென்றால் தொடர்ந்து ஒரு மாற்றத்தை உருவாக்க ஆன்ம பலம் மிகவும் முக்கியம். அது பெரும்பாலனவர்களின் வாழ்க்கையில் இருக்கும் என்று கூற முடியாது.

இதற்கு உண்மையான தீர்வு என்னவாக இருக்கும் என்றால் time science க்கு என்று ஒரு இடம் இருந்து அங்கு பல திருமணமான தம்பதியர் வந்து குறைந்தது ஐந்து நாட்கள் முதல் பதிமூன்று நாட்கள் வரை தங்கி தினமும் திருமணம் குறித்த புரிதலையும் கணவன் மனைவி குறித்த குழப்பங்களை முதலில் தனியாகவும் பின் அனைத்து தம்பதியினரையும் ஒன்றாக வைத்தும் விளக்கங்கள்கொடுத்து அதனோடு ஆன்ம்பலத்திற்கு தேவையான பயிற்சிகளும் தந்து நான் கூறிய மாற்றங்களை கடைபிடித்து அதில் வரும் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று முழுமையான மாற்றத்தை அடையவேண்டும். அது அவர்கள் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றும் வாய்ப்பு அதிகம்.

இதற்கான இடம் தொடங்கி பல பெரும் முதலீடுகளும் இதை செயல்படுத்த நிறைய ஆட்கள் கொண்ட நிறுவனமும் தேவை. அதெல்லாம் இப்பொழுதைக்கும் பெரும் கனவு. என்னுடைய தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டு மக்கள் நலனுக்காக அனைவரும் சேர்ந்து இழுக்கவேண்டிய தேர். இப்பொழுதைக்கு இதற்கான எந்த சாத்தியம் இல்லை. ஆனாலும் இந்த பிரச்சனைக்கு இப்பொழுதைக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.

சிக்கல் 2 :

சமீபத்தில் இன்னொன்றை கவனித்தேன். என்னுடைய நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ அவர்கள் பற்றிய நினைவுகள் வரும் பொழுதெல்லாம் அவர்கள் பற்றிய எதிர்மறை எண்ணங்களை அதிகமாக வருகிறது. அவர்கள் பற்றிய நேர்மறை எண்ணங்கள் அதிகம் வருவதில்லை என்பதை உணர்ந்தேன். எண்ணங்கள் தூய்மை அடையாமல் எந்த முன்னேற்றத்தையும் ஆன்மீகத்தில் அடைய முடியாது. இதற்கும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன்.

இவை இரண்டுக்கும் ஒரே தீர்வை மகரிஷி கொடுத்து இன்னொரு சிக்கலையும் சேர்த்து தீர்த்துவைத்துவிட்டார்.

தீர்வு 1 :

சில வாரங்களாக தொடர்ந்து தியானம் செய்து வருகிறேன். நல்ல முன்னேற்றம் வந்திருக்கிறது. தியானத்தின் முடிவில் மகரிஷி எல்லோருக்கும் வாழ்த்து சொல்லச்சொல்வார். முதலில் மனைவி பின் உடன்பிறந்தவர்களுக்கு, நண்பர்களுக்கு, தொழிலில் தொடர்புடையவர்களுக்கு இறுதியாக நம்மை எதிரியாக நினைப்பவர்களுக்கும் அவர் அவர்களின் உருவத்தை மனதில் கொண்டு வந்து வாழ்க வளமுடன் என்று கூறவேண்டும்.

முன்பெல்லாம் மனைவிக்கு,தங்கைக்கு,சில நண்பர்களுக்கு மற்றும் தொழிலில் என்னுடைய manager க்கு என்று கூறிவந்தேன். ஆனால் மேல் சொன்ன சிக்கல் குறித்த பிரக்ஞை வந்த பிறகு இப்பொழுது தினமும் என்னிடம் வந்து ஆலோசனைக்குவரும் அனைவரையும் முகம் தெரிந்தவர்களை மனதில் நினைத்தும் முகம் தெரியாதவர்களை பெயரைக்கொண்டும் தொடர்ந்த் மனதாற வாழ்க வளமுடன் என்று வாழ்த்துக்கிறேன்.

இதை ஒவ்வொரு முறை செய்யும் பொழுது எனக்கு உடல் முழுதும் ஆற்றல் பல மடங்கு அதிகமாவதை உணர்கிறேன். அது என்னையும் மிகுந்த நேர்மறைக்குள் கொண்டு வருகிறது. இதை உணர்வு நான் யாருக்கு வாழ்த்து தருகிறேனோ அவர்களுக்கும் பிரபஞ்ச தொடர்பு மூலம் ஆற்றல் பெருகும். ஆன்ம பலத்தை உண்டாக்க முடியும்.
மாற்றத்தை ஏற்படுத்த தேவையான சூழலை அதுவே அமைத்து தரும் வாய்ப்பு அதிகம்.

இந்த தீர்வு இதற்கு மட்டும் பயன்படவில்லை. இது இன்னும் பல மடங்கு உருமாறியிருக்கிறது.

தீர்வு 2:

இந்த தீர்வு-1 ஐ தொடர்ந்து சில தினங்களுக்கு முன் ஒரு முடிவை செய்தேன். ஒரு நாளில் யாராவது என்னிடம் தொடர்பு கொண்டாலோ அல்லது அவர்களை பற்றி நான் நினைத்திருந்தாலோ அவர்கள் அனைவருக்கும் மாலையில் செய்யும் தியானத்தின் முடிவில் வாழ்த்துக்கூறுவது என்று முடிவு செய்தேன். கிட்ட தட்ட ஒரு நாளைக்கு ஏறத்தாழ 15-20 பேர் வரைக்கூட அவர்களை நினைத்து வாழ்க வளமுடன் என்று கூறுகிறேன்.

அது பெரும் விடுதலையாக இருக்கிறது. தொடர்ந்து நான்கு ஐந்து நாட்கள் செய்தாலே யாரைப்பற்றியேனும் எதிர்மறை எண்ணம் இருந்தால் அது எல்லாம் மறைந்து நேர்மறை எண்ணங்கள் வரத்தொடங்கிவிட்டது. இதனால் யாருடைய முகம் நினைவுக்கு வந்தாலும் அவர்கள் பற்றிய நல்ல விஷயங்களே முதலி்ல் வருகிறது.
இது நாள் முழுவதும் என் ஆற்றல் இழப்பைத்தடுத்து என்னை எப்பொழுதும் நேர்மறையில் வைத்திருக்கவும் உதவுகிறது.

தீர்வு 3:

இதே நேர்மறை தன்மையோடு ஆலோசனை வழங்கும் பொழுது என் வாடிக்கையாளர்கள் என்னை தொந்தரவே செய்தாலும் அவர்கள் மீது முழு அக்கறை செலுத்தி ஜாதகம் பார்த்து தரமுடிகிறது. அவர்கள் மீது கோபம் வருவது மிகவும் குறைந்துவிட்டது.

***

இப்படி நாம் யாருக்கேனும் அடிக்கடி வாழ்த்துக்கூறும் பொழுது அவர்களுக்கும் நம்மைப்பற்றிய நல்ல எண்ணமே அதிகம் உருவாகும். பின் எப்பொழுது நேரில் சந்தித்தாலும் நேர்மறை ஆற்றல் நிறைந்து அந்த உறவு மேலும் பலப்படும்.

***

இதை படிக்கும் நீங்களும் மற்றவர்களாக வாழ்த்துங்கள். உங்களில் யாருக்கேனும் வாழ்க்கையில் ஏதேனும் மனக்குழப்பங்கள் அல்லது உடல் உபாதையில் இருந்தால் உங்கள் பெயரை மட்டும் comment ல் கூறவும். நாளை முதல் ஒரு வாரத்திற்கு தவத்தின் முடிவில் தினமும் வாழ்த்துகிறேன்.

அது உங்களுக்கான ஆன்ம பலத்தை கொடுத்து பிரச்சனைக்கான தீர்வோ அல்லது தீர்வை நோக்கி நகர்வதற்கான சிறு வழிகாட்டுதலையோ உங்களுக்கு தரலாம்.

நாம் ஒருவரை ஒருவர் வாழ்த்தி உயர்வதற்காகவே மகரிஷி போன்ற பல மகான்கள் நம் பூமியில் அவதரித்தனர். அவர்களின் அருள் பூரணமாக இதன் மூலம் நம்மை முழுமையாக வந்தடையும்.

வாழ்க வளமுடன்
#திருலஷ்மண்

22/07/2021
21/07/2021

Good morning

Address

Greenlands, Covai Road , (opp Boomerang Ice Cream)
Karur
639002

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+918300042916

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Aarathanaa Dry cleaners posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Aarathanaa Dry cleaners:

Share

Category